இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!


இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!

Tuesday 10 June 2014

ஜிலேபி!

ஊரிலிருந்து வந்திருந்த மகளிடம் என் நெடுநாள் ஆசையை வெளியிட்டேன்.

"நீது, இன்னைக்கு ஷாப்பிங் போயிட்டு வரும் போது எனக்கு ஒரு ஜிலேபி மட்டும் வாங்கிட்டு வாம்மா!"

என் வேண்டுகோளை ஒரேயடியாக மறுத்த நீது, 'அப்பா இந்த ஸ்வீட் தவிர எது வேணாலும் கேளுங்க வாங்கித் தர்ரேன்.

டப்லேட் வேணுமா? லேப்டாப் வேணுமா? 40000 ரூபாய்க்கு மேலே ஆகக் கூடிய பொருள் வேண்டுமா? வாங்கித் தர்ரேன். ஆனா ஜிலேபி,  ஸ்வீட்டுகளுக்கு நோ தான் என்றாள்.

எனக்கு சிறுவயது முதல் ஜிலேபி என்றால் வெகு ஆசை. நிறைய சாப்பிடுவேன். இப்போது நான் சுகர் பேஷண்டு! இனிப்பையே இப்பொழுது யாரும் என்னைத் தொட விடுவதில்லை. நானும் கடந்த ஏழாண்டுகளுக்கும் மேலாக என் ஆசைக்கு ஒரு திண்டுக்கல் பூட்டுப் போட்டு அடக்கிக் கொண்டேன். இன்று அந்த ஆசை என்னையும் மீறி பீறிட்டு எழ அடக்கிக் கொண்டேன்.

மாலை திடீரென மயங்கி விழுந்தேன். டாக்டர் கோகுல்நாத்திற்குப் போன் பறக்க அவரும் விரைந்து வந்து பார்த்து, சுகர் ரொம்ப லொவா இருக்கு, உடனே சீனியோ, சாக்லெட்டோ, இனிப்போ ஏதாவது கொண்டு வந்து கொடுங்கள், சீக்கிரம் - துரிதப்படுத்தினார் மருத்துவர்.

என் மனைவி சாக்லெட்டுடன் வர, என் மகள் அமிர்தம் ஸ்வீட்டுக்குப் பறந்து ஜிலேபியுடன் வர - வாயெல்லாம் இனிப்பு. தலைச்சுற்றல் - மயக்கம் எல்லாம் தெளிந்து எழுந்தேன்.

என் மகள் நான் கேட்டதுமே ஜிலேபி ஒன்றை வாங்கித் தந்திருந்தாள் இந்நிலை வந்திருக்குமா?

1 comment:

  1. “ஜிலேபி“ சிறுகதை ஜிலேபியாய் இனித்தது.

    ReplyDelete