இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!


இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!

Monday 9 June 2014

பள்ளிக்குப் போ!

                        வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்...''--என்ற பாடலைப் பாடியபடி கைப்பேசியின் அலாரம் கண்ணனை எழுப்பியது.

                       கண்விழித்த கண்ணன் அலார இசை ஒலியை நிறுத்தினானே ஒழிய படுக்கையில் இருந்து எழுந்திருக்கவில்லை.

                       அவனது அறைக்குள் நுழைந்த மரகதம்''என்னடா!அதுதான் அதான் அலாரம் பாட்டு பாடி எழுப்பிருச்சே! இன்னும் என்ன படுக்கை? சீக்கிரம் எழுந்திருச்சி வந்து பல் துலக்கி குளிச்சிட்டுவா!ஸ்கூலுக்கு நேரமாகுதுல்லே!''

                       அம்மா கட்டளையிட்டாள்.

                       ''போம்மா!இன்னிக்கி நான் ஸ்கூலுக்குப் போகப் போறதில்லை.லீவ் போட்டுடறேன்!''--என்று கூறிக்   கொண்டே படுக்கையில் புரண்டான் கண்ணன்.

                       மரகதத்திற்குக் கோபமான கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது.

                       ''ஸ்கூலுக்கு ஏண்டா போக மாட்டே?இப்போ எதுக்குடா லீவு?அதுவும் அடுத்த வாரம் பரீட்சை ஆரம்பமாகுதுன்னு வேற சொன்னே!''

                         கோபத்தில் கத்தினாள் மரகதம்.

                        ''பரீட்சை கிடக்குதம்மா பரீட்சை!இன்னிக்கி டி.வி.யிலே காலையிலேயே ஐ.பி.எல். மாட்ச் பார்க்கணும். அதுக்குத்தான் லீவ் போடப்போறேன்.

                         மகனின் பேச்சைக் கேட்டதும் தலையில் அடித்துக் கொண்டாள் மரகதம்.

                        ''டேய்..டேய்..படிப்புடா...படிப்பு ரொம்ப முக்கியம்.பதினைஞ்சி வருஷத்துக்கு முன்னாலேயும் நீ இப்படித்  தான் அடிக்கடி பள்ளிக்கூடம் போகமாட்டேன்...லீவ் போடப் போறேன்னு சொல்லுவே!அப்போ நீ லீவ் போட்டாலும் உன் ஒருத்தன் படிப்புதான் பாதிக்கும்.ஆனா இப்போ நீ லீவ் போட்டா உன் வகுப்பிலே படிக்கிற நாப்பது பிள்ளைங்க படிப்பும் இல்லே      பாதிக்கும்.

                        ''எந்திரி ராஜா!சமத்தா போய் குளிச்சிட்டு வாடா! பள்ளிக்கூடத்துக்கு நேரமாகுது!''

                        மேல் நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் தன் மகனைப் பள்ளிக்கு அனுப்புவதற்குள் அந்தத் தாய்க்குப் போதும் போதும் என்றாகி விட்டது.

No comments:

Post a Comment