இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!


இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!

Sunday 8 June 2014

அருட்கருணை

          நன்கொண்டான் என்ற அந்தப் பிரசித்திப் பெற்ற சிற்றூரின் ஒரு சிறிய குடிலின் திண்ணையில் அமர்ந்திருந்த துறவி திவ்வியானந்தரின் கண்களில் இருந்து கண்ணீர் கங்கையெனப் பிரவாகம் எடுத்துத் தாரைதாரையாகக் கொட்டியது.

         வெகு நேரமாக அதைப் பார்த்துக் கொண்டிருந்த முதன்மைச் சீடர் முத்தானந்தா மனம் தாளாமல் கேட்டே விட்டார்,

         "சுவாமி,!தங்களின் கண்ணீருக்குக் காரணம் யாதோ?"

         "முத்தா!நம் கிணற்றில் நீர் மொள்ள வைத்திருந்த பித்தளை வாளியை யாரோ திருடிச் சென்று விட்டனர்.அவர் அதை என்னிடம் கேட்டிருந்தால் நானே கொடுத்திருப்பேன்.மாறாக ஒருவன் திருடிப் பாவம் செய்ய நானே காரணமாகி விட்டேனே என எண்ணும் போது மனம் தாளவில்லை."-என்று வேதனையுடன் கூறிய துறவி, தொடர்ந்து, "இனி கிணற்றில் நீர் இறைக்க மண் குடத்தையே பயன் படுத்துவோம்."-என்றார்.


          தன் குருவின் கருணை சீடனுக்கும் அருளுபதேசம் செய்தாற் போல் உணர்ந்தார்.

No comments:

Post a Comment