இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!


இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!

Sunday 8 June 2014

சும்மா

வீட்டை விட்டுக் கிளம்பும் போது என் மனைவி கேட்டாள்,’’எங்கே போறீங்க?’’ என்று. ‘’சும்மா, வெளியே போயிட்டு வந்துடறேன்’’—என்று சொல்லி விட்டு தெருவில் கால் பதித்தேன்.

     பக்கத்து கங்கையம்மன் கோவிலுக்குள் நுழைந்த போது ஏகாம்பரம் எதிர்பட்டார்.,’’ஏது கோவிலுக்கெல்லாம்!’’---என்று ஏதோ நான் செய்யக்கூடாத்தைச் செய்து விட்ட மாதிரி கேட்டார். ‘’சும்மா சாமி கும்பிட!’’ –என்றேன்.

      அப்படியே நடந்து முருகன் முருகன் கல்யாண மண்டப பஸ் ஸ்டாப்பில் வரவும் எதிர்பட்ட சண்முகம் கேட்டார்,’’எங்கே இப்படி?’’  ‘’சும்மா இப்படியே வந்தேன்!’’---என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே பஸ் வரவும் ஏறினேன்.

      டைடல்பார்க் ?’’—என்று அவர் சும்மா ஒரு பேச்சுக்குக் கேட்டதும் நானும் பதில் கூற முடியாமல் சும்மா திருதிரு வென்று விழித்தேன்.ஸ்டாப்பில் இறங்கினேன். உள்ளே தபால் ஆபீசும் உண்டு. அந்த அஞ்சலகத்தில் நுழைந்து என் ஹாண்ட் பாக்கில் இருந்த பேப்பரை எடுத்து நடந்ததை சும்மா ஒரு பத்து வரியில் எழுதி---என் முகவரி, செல் நம்பர் எல்லாம் எழுதி கவரில் திணித்து  பத்திரிக்கை முகவரிக்கு சும்மா போஸ்ட் பாக்சில் போட்டு விட்டு வந்தேன்.

      ஒரு வாரம் கழித்து ஞானேஸ்வரனிடமிருந்து இருந்து போன்! ‘’நீங்க அனுப்பியது கதையா?கட்டுரையா?’’—என்று அவர் சும்மா கேட்டு வைக்க நானும் ‘’சும்மா ஏதோ எழுதினேன்!’’—என்றேன். ‘’சும்மாதானே---அப்போ நாங்க பிரசுரம் பண்ணினா பணம் அனுப்ப வேண்டாமே! சும்மாதானே எழுதினீர்கள்

      நான் சும்மா எழுதினாலும் சுமாரா எழுதியிருப்பேன் போல! இல்லை என்றால் அவர் சும்மா போன் பண்ணி கேட்பாரா?’’

1 comment:

  1. உங்களின் “சும்மா“வும் சுவையாகத் தான் இருக்கிறது ஐயா.

    ReplyDelete