இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!


இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!

Sunday 8 June 2014

ஓட்டை விட்டெறி

'சொக்கட்ஸே'என்ற அடர்ந்த காட்டில்'மீநா'என்ற முனிவர் கடும் தவம் இயற்றி வந்தார். அவரது ஒரே மகன்   'துநா' என்பவரும் பால பருவத்தில் இருந்தே தந்தை வழியில் துறவு பூண்டு தவமியற்றினார்.அவருக்கு வயது பதினெட்டாதும் தந்தை தன் மகன் உலக ஞானம் பெற வேண்டும் என்று விரும்பினார்.எனவே,மகனை அழைத்து''மைந்தா,நீ வேதங்களைக் கற்று தவமும் இயற்றி தேவையான அளவு திருவருளும் பெற்றாய்.இனி நீ சிறிது உலக அனுபவமும் பெற வேண்டும்.எனவே இன்றே நீ இக்கானகத்தை விட்டு அருகில் உள்ள ஊருக்குச் சென்று சிறிது காலம் வாழ்ந்து விட்டு வா!''என்று          கூறி அவனது கையில் திருவோடு ஒன்றையும் கொடுத்து வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.

                       தந்தையிடமிருந்து திருவோட்டைப் பெற்ற மகன் கேட்டான்ய''தந்தையே,இத்திருவோட்டை எதற்கு தருகின்றீர்கள்?''-என்று.அதற்குத் தந்தை,''காட்டில் கிடைப்பது போல் நாட்டில் காய் கனிகள் கிடைக்காது.எனவே நீ உன் பசிக்கு அங்கு வாழும் இல்லறத்தாரிடம் உணவை யாசித்துப் பெற்றே உண்ண வேண்டும்.அவ்வாறு உணவை யாசித்துப் பெற்றுக்கொள்ளவே இந்தத் திருவோடு!''என்று கூறி வழி அனுப்பி வைத்தார்.

                       ''தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை''என்பதற்கு இணங்க மகனும் கானகத்தில் நெடுந் தொலைவு நடந்து காட்டைக் கடந்து நாட்டிற்குள் அடி எடுத்து வைத்தான்.பசிக்கும் போது அங்குள்ள வீடுகளின் முன் சென்று நின்று   ''பவதி பிக்ஷாந் தேஹி''என்று யாசித்து கிடைத்த உணவை திருவோட்டில் பெற்று உண்டு--அங்கிருந்த கோவில் மண்டபத்தில் தவமியற்றி வாழ்ந்து வந்தான்.

                         காலங்கள் கரைந்தன.

                        அவனுக்கு முழுஞானம் புகட்ட இறைவன் திருஉள்ளம் கொண்டார்.அதன்படி ஓர் அந்தணர் வேடம் தரித்து 'துநா'முன் வந்து நின்று யாசகம் வேண்டினார்.தன்னிடம் வந்து யாசகம் கேட்கும் அந்தணரை வியப்புடன் நோக்கிய துநா,  ''ஐயா,என்னிடம் உள்ள ஒரே உடைமை இந்தத்திருவோடுதான்.என்னால் இயன்றது இந்தத் திருவோட்டை யாசகமாக அளிப்பதுதான்.பெற்றுக் கொள்ளுங்கள்.''-என்று கூறி தன்னிடம் இருந்த அந்த ஒரேஉடைமையையும் அந்த அந்தணரிடம் தந்து விட்டு மீண்டும் விட்ட தவத்தைத் தொடர்ந்தார்.

                        அக்கணம் தொட்டு பசிக்கும் போது யார் வீட்டு முன்னாவது போய் நின்று யாசித்து அவர்கள் தரும் உணவை    --கடவுள் தந்த இரு கரங்களில் பெற்று உண்டு வரலானார்.

                         'ஆம்,துறவு என்பது தனக்கென எந்த ஒர் உடைமையும் இன்றி உள்ளத்தில் ஆசையேதும் இல்லாத மன நிர்வாணமே" என்பதை உணர்ந்து மீண்டும் தன் தந்தை வாழும் காட்டிற்கே திரும்பிச் சென்றார்.சென்று தன் தந்தையிடம் தன்   அனுபவங்களையும் அதன் வாயிலாகத்தான் கற்ற படிப்பினைகளையும்(ஞானத்தையும்)-எடுத்துரைத்து தான் உலக ஞானம்       பெற்ற முழுஞானி ஆனதை உணர்த்தினார்.இதைக் கேட்டு மகிழ்ந்த தந்தையும் தம் மகனுடன் தமது தவ்வாழ்க்கையைத்   தொடர்ந்தார்.

No comments:

Post a Comment